Home /News /national /

புல்டோசருக்கு பயந்து சரண்டர் - உ.பி. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது

புல்டோசருக்கு பயந்து சரண்டர் - உ.பி. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது

புல்டோசர் நடவடிக்கை மீது அச்சம் கொண்டே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் - காவல்துறை

புல்டோசர் நடவடிக்கை மீது அச்சம் கொண்டே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் - காவல்துறை

புல்டோசர் நடவடிக்கை மீது அச்சம் கொண்டே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் - காவல்துறை

சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த ஐந்து பேர் காவல்துறையின் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து காவல்நிலையத்தில் குடும்பத்துடன் சரணடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜெயிட்பூர் பகுதி அருகே உள்ள ஜியூலி கிராமத்தில் சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த குற்றச்சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகள் முன் புல்டோசர்களை கொண்டு நிறுத்தி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 7 காலை அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் குடும்பத்தினருடன் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். காவல்நிலைய ஆய்வாளர் ஜெய்பிராகஷ் சிங்கின் முன் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என கரம் கூப்பி நின்றதாக அம்பேத்கர் நகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - ''ஆங்கிலத்திற்கு மாற்றாக பிறமொழி மாநில மக்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' - அமித் ஷா பேச்சு

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் காவல்நிலையத்தில் வந்து தாமாக சரணடைந்துள்ளனர். புல்டோசர் நடவடிக்கை, துப்பாக்கி குண்டுகள் மற்றும் அம்பேத்கர் நகர் காவல்நிலையத்தின் செயல்பாடுகள் மீது அச்சம் கொண்டே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - ‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்த பின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை கறாராக பின்பற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் முக்கிய பகுதியாக மாபியாக்கள், கிரிமினல்கள் ஆகியோரின் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களை அரசு புல்டோசர் வைத்து இடித்து அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கிவருகிறது.

அன்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட சட்டம் ஒழுங்கை முக்கிய வாக்குறுதியாக வைத்தே பாஜக தேர்தலை எதிர்கொண்டது. இந்த புல்டோசர் நடவடிக்கை கிண்டல் செய்யும் விதமாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் புல்டோசர் பாபா என யோகி ஆதித்யநாத்தை விமர்சித்தார். ஆனால் புல்டோசர் பாபா என்ற பெயரை முதலமைச்சர் யோகியின் ஆதரவாளர்கள் பெருமையான அடைமொழியாக மாற்றிக் கொண்டு அதையே பிராண்டாக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், உத்தரப் பிரதேசத்தின் சஹ்ரான்பூர் பகுதியிலும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இரு சகோதரர்களின் வீட்டின் முன் புல்டோசரை நிறுத்திய காவல்துறை குற்றவாளிகள் 48 மணிநேரத்தில் சரணடையவில்லை என்றால் வீடுகளை தரைமட்டமாக்குவோம் என எச்சரித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Uttar pradesh

அடுத்த செய்தி