ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது: ப.சிதம்பரம் விமர்சனம்!

ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது: ப.சிதம்பரம் விமர்சனம்!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

budget 2022 | துயரத்தில் உள்ள மக்களை பற்றி ஒருதுளி கூட கவலைப்படாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஒரு முதலாளித்துவ பட்ஜெட் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி, வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, சாலை வசதி , விவசாயம், கல்வி , டிஜிட்டல் பேங்கின், ஏழை மக்களுக்கு வீடு, 5ஜி சேவை உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இது அவர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க; தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை ஜிரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசாங்கத்தின் ஜிரோ பட்ஜெட். மாத சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போதுதான் நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றுள்ளது, ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என்றும், ஒரு நிதி அமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கான பட்ஜெட் உரை இதுதான்.

மத்திய பட்ஜெட்டில் வரவேற்புக்குரிய எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. விவசாயம், அதை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனுதவி என்பது வரவேற்க தகுந்த திட்டம். மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்கள் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..

நாடு எதிர்நோக்கி உள்ள சவால்களை சமாளிக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. துயரத்தில் உள்ள மக்களை பற்றி ஒருதுளி கூட கவலைப்படாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் எட்டப்போகும் இலக்கு குறித்து நிதியமைச்சர் பட்டியல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 25 ஆண்டு திட்டத்தின் பயன்கள் கிடைக்கும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் போல என்று அவர் விமர்சித்துள்ளார்.

First published:

Tags: P.chidambaram, Union Budget 2022