முகப்பு /செய்தி /இந்தியா / குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்..!

குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுதான் முதல் முறை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில், அந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுதான் முதல் முறை.

இந்த கூட்டத்திற்கு பின்னர், இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் 2022-2023ம் ஆண்டின் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

தொடர்ந்து அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரின் முதல் இரு தினங்கள் பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடக்கிறது.

மோடி குறித்த பிபிசி ஆவணப் பட விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கூட்டாட்சித் தத்துவம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

First published:

Tags: President Droupadi Murmu, Union Budget 2023