Home /News /national /

புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தாக்கல்..!

புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தாக்கல்..!

புதுச்சேரி பட்ஜெட்

புதுச்சேரி பட்ஜெட்

Puducherry Budget : நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 10ம் தேதி துவங்கியது. துணைநிலை ஆளுநரின் உரையுடன் துவங்கிய இக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை அரசு 11,000 கோடி ரூபாய்க்கான வரைவு பட்ஜெட்டை மத்திய அரசிடம் சமர்பித்தது. இதில் 10,696 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வரும் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டம் துவங்குகிறது.

    ALSO READ | எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சபாயகர் செல்வம், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Budget Session, Narayana samy, Puducherry, Tamilisai Soundararajan

    அடுத்த செய்தி