Home /News /national /

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

Budget 2022 | பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நாளையும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளை மறுநாளும் (பிப். 1) கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது.

    அவையை சுமூகமாக நடத்துவது குறித்து இன்று மாலை மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. வருகிற 2022-23ம் நிதியாண்டுக்கான 17வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன. 31) தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப். 11ம் தேதி வரையும், அடுத்த கூட்டம் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.

    மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும். தொடக்க நாளான நாளை, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

    அடுத்த நாளான பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அதற்கடுத்த நாளான பிப். 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

    மேலும் படிக்க: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

    குடியரசு தலைவரின் உரையில் மத்திய அரசால் கடந்தாண்டு செயல்படுத்திய சாதனைகளும், வரும் நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விபரங்களும் அவரது உரையில் இடம்பெறும். பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்பிக்கள் நடந்துகொள்வது குறித்த விதிமுறைகளை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

    அதில், எம்பிக்கள் அவை மரபைக் காக்கும் வகையில் எவ்விதம் செயல்பட வேண்டும். தங்களின் பொறுப்பை உணர்ந்து அவை விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும். அவை மாண்பை குலைக்கும் வகையிலான செயலில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நாளையும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளை மறுநாளும் (பிப். 1) கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...  ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

    மேலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்த கேள்விகளை பிப். 2ம் தேதி உறுப்பினர்கள் எழுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்க உள்ளதால் வழக்கமான நடைமுறையின்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nirmala Seetharaman, Parliament, PM Modi

    அடுத்த செய்தி