நாட்டின் உணவு தானிய கையிருப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது: குடியரசுத்தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

 • Share this:
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

  பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் உணவு தானிய கையிருப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், வேணான் சட்டங்களை எதிர்க்கும் கட்சிகள் முன்பு ஆதரவு தெரிவித்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி குடியரசுத்தலைவர் ரம்நாத் கோவிந் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்  உரையாற்றினார்.

  மேலும், சொந்த வழியில்செல்லுதல், செயற்கைக்கோள் அமைப்பு நேவிகேட்டர் ஆகியவை இன்று இந்தியாவின் பெருமையை அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் இதன் பயனை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

  ஜன் தன் கணக்குகள், ஆதார் மற்றும் மொபைல்களின் செயல்பாடுகள் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.   1,80,000 கோடி ரூபாய் தவறான கைகளுக்குச் செல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் அப்போது கூறினார்.

  எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல பொருட்களின் உற்பத்தியில் நன்மைகள் கிடைக்க தொடங்கியுள்ளன. மேலும், நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக  வரி மதிப்பீடு மற்றும் முறையீடுகளுக்கு அரசாங்கு புதிய வழியை வழிவகுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

  புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான செயல்பாடுகளை , முந்தைய அரசாங்கங்களும் பலவிதமாக முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால்,  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்துதான் நம் நாடு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டத் தொடங்கியுள்ளது என்பது மகிழ்ச்சியானது  நிகழ்வு என்று கூறினார்.

  மேலும் படிக்க... தீரமிகு’ காவலர்கள்: குடியரசு தின வன்முறையில் துணிச்சல்: நாடு பெருமையடைவதாக போலீஸாருக்கு அமித் ஷா பாராட்டு

  புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதன் மூலம், ஒவ்வொரு உறுப்பினரும் தனது நாடாளுமன்ற கடமைகளை சிறப்பபாக நிறைவேற்ற தேவையான வசதிகள் இருக்கும் என்று கூறினார்.

  மேலும், விவசாய சட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி அரசு செயல்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: