தகவல் பூங்காக்கள்: பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி! பட்ஜெட்டில் தொழில்நுட்பத்துறைக்கான அறிவிப்புகள்

தகவல் பூங்காக்கள்: பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி! பட்ஜெட்டில் தொழில்நுட்பத்துறைக்கான அறிவிப்புகள்
இணைய சேவை
  • Share this:
தனியார் பங்களிப்புடன் நாடு முழுவதும் தகவல் பூங்காங்கள்(data center parks) அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துவருகிறது. ஔவையார் பாடலை உதாரணமாகக் கூறிய விவசாயத்துறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக, உள்கட்டமைப்பு, விவசாயத்துறை, எரிவாயுத்துறை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இணையச் சேவை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், பாரத் நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்மூலம், நாடு முழுவதும் தனியார் பங்களிப்புடன் தகவல் பூங்காங்கள்(data center parks) அமைக்கப்படும். பாரத் நெட் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும்.


கிராம பஞ்சாயத்துக்கள் அளவிலுள்ள பொதுத்துறை அமைப்புகளுக்கு இணையதள வசதி அளிக்கப்படும். குவாண்டம் தொழில்நுடப்பத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

Also see:
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading