Home /News /national /

மத்திய பட்ஜெட் 2022: உயருமா வருமான வரி விலக்கு உச்சவரம்பு? மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு!!

மத்திய பட்ஜெட் 2022: உயருமா வருமான வரி விலக்கு உச்சவரம்பு? மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு!!

Budget 2022 | கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது.

Budget 2022 | கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது.

Budget 2022 | கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது.

    செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பிப்ரவரி 1ஆம் தேதியான நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை, பணவீக்கம், ஐந்து மாநில தேர்தல் என பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்களிடையே எழுந்துள்ளது.  கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது. இதை உயர்த்த வேண்டும் என கடந்த பட்ஜெட்டிலேயே கோரிக்கை எழுந்தபோதும் உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இருப்பினும், 5 லட்சம் ரூபாய் என்ற வரம்பு சாத்தியம் இல்லை என்று கூறப்படுவதால், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன்பெற்று வருகிறது: பட்ஜெட் உரையில் குடியரசுத் தலைவர் பெருமிதம்!

    இதனுடன், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் தற்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கிறது. இதையும் 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    இது தொடர்பான அறிவிப்பும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nirmala Seetharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி