ஹோம் /நியூஸ் /இந்தியா /

92 நிமிடத்தில் பட்ஜெட் உரையை முடித்த நிர்மலா சீதாராமன்

92 நிமிடத்தில் பட்ஜெட் உரையை முடித்த நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 92 நிமிடத்தில் பட்ஜெட் உரையை முடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பணவீக்கப் பிரச்னை, கொரோனா மூன்றாவது அலை என பல்வேறு சவால்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், மத்திய பட்ஜெட் க்ரிப்டோ கரன்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக நீண்ட நேரம் பட்ஜெட் உரை ஆற்றும் தன்மைகொண்டவர் நிர்மலா சீதாராமன். முதல்முறையாக 2019-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்137 நிமிடங்கள் பேசினார். சுமார், இரண்டு மணி நேரத்துக்கும் அதிகம். இரண்டாவது முறை 2020-ம் ஆண்டு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 162 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சுமார் 3 மணி நேரத்துக்கு 18 நிமிடங்கள்தான் குறைவு. கடந்த ஆண்டு 137 நிமிடங்கள் பட்ஜெட் உரையின் நீளம் இருந்தது. இந்தநிலையில், இந்தமுறை பட்ஜெட் உரையை முடிப்பதற்கு குறைந்த நேரத்தையே நிர்மலா சீதாராமன் எடுத்துக்கொண்டார். 92 நிமிடங்களில் தன்னுடைய பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார் நிர்மலா சீதாராமன்.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2022