Home /News /national /

Budget 2022: முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்.. அல்வா கிண்டுவது நிறுத்தம்!

Budget 2022: முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்.. அல்வா கிண்டுவது நிறுத்தம்!

Budget 2022 | பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Budget 2022 | பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Budget 2022 | பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், கொரோனா பரவல் காரணமாக அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவலின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதன் திரிபு வகையான ஒமைக்ரானும் அதிகளவில் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பானது லட்சக்கணக்கில் பதிவாகி வருவதற்கு மத்தியில், 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டை போல, காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு அறிவிப்பில், 2022-23க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி காகிதமில்லா முறையில் தாக்கல் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read:  2022ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்கர் - குற்றமும்.. பின்னணியும்..

    வரலாற்று நடவடிக்கையாக முதன்முறையாக 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல், காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘யூனியன் பட்ஜெட்’ என்ற செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவரங்களையும் பிப்.1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த பின்னர் அனைவரும் செயலியில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

    இந்த ‘யூனியன் பட்ஜெட்’ செயலியில், நிதியமைச்சரின் பட்ஜட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். மேலும், இந்த செயலி ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த செயலியை (www.indiabudget.in) என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், பட்ஜெட் குறித்த ஆவணங்களை பொதுமக்கள் இதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சி நடக்கும்.

    இதில் நிதியமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது. பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1ம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வானது 1.30 மணிநேரம் முதல் 2 மணிநேம் வரை நடைபெறும் என தெரிகிறது.

    Also read:  பிஸ்கெட்களை தரையில் வீசி இளைஞரை உதைத்து சாப்பிட வைத்த கும்பல் - பகீர் காரணம்!!

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nirmala Sitharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி