Home /News /national /

பட்ஜெட் 2022: தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள்!!

பட்ஜெட் 2022: தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள்!!

Budget 2022 | இந்த ஆண்டும் மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ரீதியாக அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2022 | இந்த ஆண்டும் மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ரீதியாக அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2022 | இந்த ஆண்டும் மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ரீதியாக அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

    வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை பேப்பர்கள் கொண்டு வரப்படும். இந்த நடைமுறையை மாற்றிய நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற துணியால் செய்யப்பட்ட பையில் பட்ஜெட் பேப்பர்களை எடுத்து வந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறை பட்ஜெட் தொடரானது, 3 அலையை எதிர்நோக்கி வரும் கொரோனா பொருந்தொற்றை மையப்படுத்தியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1ம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வானது 1.30 மணிநேரம் முதல் 2 மணிநேம் வரை நடைபெறும் என தெரிகிறது. எனினும், கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2.40 மணி நேரம் தொடர் உரையாற்றினார். இதுவே இந்தியாவின் மிக நிளமான பட்ஜெட் உரையாக பார்க்கப்பட்டது.

    பட்ஜெட் 2022 எதில் காணலாம்?

    2022 மத்திய பட்ஜெட் லோக்சபா டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதைத்தவிர்த்து, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூகவலைதங்களிலும் பட்ஜெட் உரையை பார்க்கலாம். மேலும், செய்தி தொலைக்காட்சிளில் நேரடி ஒளிபரப்பும் நடைபெறும்.

    வரலாற்று நடவடிக்கையாக முதன்முறையாக 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல், காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘யூனியன் பட்ஜெட்’ என்ற செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவரங்களையும் பிப்.1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த பின்னர் அனைவரும் செயலியில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

    இந்த ‘யூனியன் பட்ஜெட்’ செயலியில், நிதியமைச்சரின் பட்ஜட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். மேலும், இந்த செயலி ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

    இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், பட்ஜெட் அதிக கவனம் பெற்றுள்ளது. கடந்த வருடம் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மற்றும் பிற வசதிகளை வழங்க ரூ.35,000 கோடி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து, உலகின்மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா முன்னெடுத்தது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர்.

    அதனால், இந்த ஆண்டும் மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ரீதியாக அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரிசெலுத்துவோர், 2022 பட்ஜெட்டில் வரிச்சலுகை மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர், மத்திய பட்ஜெட்டை பெரிதும் எதிர்நோக்குவதே வரிச்சலுகையை எதிர்பார்த்து மட்டும் தான்.

    தற்போதைய வரம்பாக வைக்கப்பட்டுள்ள 1.5 லட்சத்திற்கும் அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், கூடுதல் முதலீட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த 1.5 லட்சம் வரம்பு என்பது, நீண்ட வருடங்களாக இருந்த வருவதும் என்றும் தெரிவிக்கின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nirmala Sitharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி