பட்ஜெட் என்பது என்ன? - ‘இந்தியாவை விற்போம்’- திரிணாமூல் காங்., கடும் தாக்கு

பட்ஜெட் என்பது என்ன? - ‘இந்தியாவை விற்போம்’- திரிணாமூல் காங்., கடும் தாக்கு

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓபிரையன்.

பெரும் பணக்காரர்கள் தவிர மற்றவர்கள் விலை உயர்வு, பெருகும் வேலையின்மை, ஊழல் ஆகியவற்றுடன் போராடுகின்றனர், ஆனால் ஆத்மநிர்பார், தற்சார்பு இந்தியா என்ற பிரச்சாரம் ஜோடனை மொழிதல் மட்டும் சாமானிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

 • Share this:
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 3வது நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான எதிர்வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றன.

  காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளன.

  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓபிரையன் கூறும்போது எந்த வித தொலைநோக்குப் பார்வையுமற்றது என்றும் அதன் முக்கியக் கரு ‘இந்தியாவை விற்று விடுவோம்’என்பதே என்று சாடியுள்ளார்.

  இவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தப் பட்ஜெட்டின் கரு இந்தியாவை விற்போம் என்பதே, ரயில்வே விற்கப்பட்டது, விமானநிலையங்கள் விற்கப்பட்டது, துறைமுகம்: விற்கப்பட்டது. காப்பீடு-விற்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள்-23 விற்கப்பட்டது. சாமானிய மக்கள் புறக்கணிக்கப்பட்டனர், விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவார்கள், நடுத்தர வர்க்கத்துக்கு எதுவும் இல்லை, ஏழைகள் மேலும் ஏழைகளாவார்கள்

  காங்கிரஸ் தனது விமர்சனத்தில், இந்த பட்ஜெட்டை, ‘திசையற்ற பட்ஜெட்’ என்றும் நோய்க்கணிப்பிலும் தவறு, அதற்கான மருத்துவத்திலும் தவறு என்று சாடியுள்ளது.

  மக்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகய் கூறும்போது, “ஏழைகளுக்கான பட்ஜெட்டாக மாற்ற நிர்மலா சீதாராமனுக்கு தைரியம் போதவில்லை. ஒருநாடு ஒரு ரேஷன் கார்டு திட்டமும், பொதுச்சுகாதாரத்துக்கு அதிக தொகை ஒதுக்கீடும் இந்த திசையற்ற பட்ஜெட்டின் இரண்டு பிரகாசப் புள்ளிகள் மற்றபடி இந்த பட்ஜெட்டை சில வாரங்களில் மறந்து விடுவார்கள்.

  இந்தியாவை பாஜக திவாலாக்கி வருகிறது. பொது நிறுவனங்களின் சொத்துக்களை 12-15 பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது.

  பெரும் பணக்காரர்கள் தவிர மற்றவர்கள் விலை உயர்வு, பெருகும் வேலையின்மை, ஊழல் ஆகியவற்றுடன் போராடுகின்றனர், ஆனால் ஆத்மநிர்பார், தற்சார்பு இந்தியா என்ற பிரச்சாரம் ஜோடனை மொழிதல் மட்டும் சாமானிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

  மணீஷ் திவாரி கூறும்போது, “தேசிய பணமாக்க திட்டமே இந்தப் பட்ஜெட், தேசத்தை விற்பதற்கான ஒரு சிறு கையேடுதான் இந்த பட்ஜெட். வேறு எந்த கவனமும் இந்தப் பட்ஜெட்டுக்கு இல்லை, என்று சாடியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: