வேளாண் சட்டங்களில் விவசாயிகள் விரும்பும் மாற்றங்களை கவனிக்க பிரதமர் மோடி தயார் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டங்களில் விவசாயிகள் விரும்பும் மாற்றங்களை கவனிக்க பிரதமர் மோடி தயார் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டங்களில் விவசாயிகள் விரும்பும் மாற்றங்கள் குறித்து கவனிப்பதற்கு பிரதமர் மோடி தயாராக உள்ளார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், நியூஸ்18 குழும தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ‘மத்திய அரசின் நோக்கத்தை விவசாயிகள் சந்தேகிப்பது ஆச்சர்யமாக உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை 2013-14 வருடத்திலிருந்து நிலையாக பயன்பாட்டில் இருந்துவருகிறது. வேளாண் சட்டங்களில் அவர்களுக்கு இருக்கும் அச்சம் குறித்து தெளிவாக விவசாயிகளை எடுத்துரைக்கச் சொல்கிறோம். அதனால், இத்தனைகட்ட பேச்சுவார்த்தை செல்கிறது. மத்திய வேளாண் துறை அமைச்சருடன் உட்கார்ந்து விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. வேளாண் சட்டங்களில் விவசாயிகள் விரும்பும் மாற்றம் குறித்து கவனிப்பதற்கு பிரதமர் மோடி தயாராக உள்ளார்.

  நாங்கள், விவசாயிகள் விரும்பும் மாற்றத்தை தெளிவாக குறிப்பிடவேண்டும் என்று விரும்புகிறோம். விவசாயிகள் ஒருவேளை தவறாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கலாம். நான் அவர்களிடம் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்கு அச்சமிருக்கும் பாயின்ட்களை பேசவேண்டும் என்று விரும்புகிறோம். விவசாயிகளுக்காக விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: