புதிய விவசாய உள்கட்டமைப்பு வரியால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன்

விவசாய உள்கட்டமைப்பு வரியால் மாநிலங்களுக்கும், நுகர்வோருக்கு எந்தச் சுமையும் கூடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், நியூஸ்18 குழும தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ‘விவசாயத்துறைக்கு உதவுவதற்காக சில பொருள்களின் மீது விவசாய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியை நான் விதித்துள்ளேன். விவசாய உள்கட்டமைப்பு வரி கூடுதல் கலால் வரியின் பகுதியிலிருந்து விதிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசுக்கானது. இந்தப் புதிய வரியின் காரணமாக, மாநிலங்கள் மற்றும் நுகர்வோர்கள் மீது அந்த வரி விழாது. அதனால், அவர்கள் கவலைப்பட வேண்டாம்.

  தங்கத்தின் மீது ஏற்கெனவே 12 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்மீது, 4 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பெரும்பாலான பொருள்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. கலால் வரி குறைக்கப்பட்டு, அதிலிருந்துதான் விவசாய உள்கட்டமைப்பு வரி விதிக்கப்படுகிறது.

  விவசாயத்துறைக்கு பொருளாதார உதவி செய்வதற்காகத்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பொருளை வாங்கும் நுகர்வோர் ஒரு ரூபாய் கூட கூடுதலாக கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதுதான் இதில் முக்கியமானது’ என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: