Exclusive | இப்போது பட்ஜெட்டில் செலவுசெய்யவில்லையென்றால் வளர்ச்சியை தள்ளிபோடுவதாகிவிடும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Exclusive | இப்போது பட்ஜெட்டில் செலவுசெய்யவில்லையென்றால் வளர்ச்சியை தள்ளிபோடுவதாகிவிடும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நான் இப்போது செலவு செய்யவில்லையென்றால் நாம் வளர்ச்சியைத் தள்ளிபோடுகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், நியூஸ்18 குழும தலைமை செய்தி ஆசிரியருக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ‘பட்ஜெட்டில் நான் கூறியதில் இரண்டு, மூன்று முக்கிய பாயிண்ட்கள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். என்னிடம் கொடுப்பதற்கு அதிகமாக இருந்தால் நான் அதனை மக்களிடம்தான் கொடுத்திருப்பேன் என்பது தெளிவானது. மக்களிடம் பணத்தை கொடுக்கவேண்டும் என்பது உடனடித் தேவை என கேள்வி எழுகிறது. உடனே, மக்களிடம் பணத்தைக் கொடுப்பது பணச் சுழற்ச்சியை தூண்டுவதற்கான சரியான வழிமுறையாக இருந்திருக்குமா? என்று இன்னொரு கேள்வியும் எழுகிறது.

எல்லா செயல்பாட்டுக்கும் வரிவிதிப்பதன் மூலம் பணம் வழங்குவதை நான் விரும்பவில்லை. மேம்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் மூலம் சிறந்த காலங்களை நாம் பார்ப்போம் என்று நம்புகிறோம். நாங்கள் சுகாதாரத்துறையை புனிதமாக அணுகுகிறோம். சாதாரண நேரங்களில் விவேகமாக அல்லது பழைமைவாதமாக இருப்பது என்பது ஒரு விஷயம்.

தற்போது நான் செலவு செய்யவில்லையென்றால் நாம் வளர்ச்சியை தள்ளிப்போடுகிறோம். தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரையில் தூண்டுதல் என்பது முற்றிலும் அவசியமான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: