Exclusive | தொழில்முனைவோர்களை இந்திய வீரர்களுடன் ஒப்பிட்டது ஏன்? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Exclusive | தொழில்முனைவோர்களை இந்திய வீரர்களுடன் ஒப்பிட்டது ஏன்? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய தொழில்முனைவோர்களின் உத்வேகம் என்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு இருந்த உத்வேகத்தைப் போன்றது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், நியூஸ்18 குழும தலைமை செய்தி ஆசிரியருக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்களுடன் தொழில்முனைவோர்களை ஒப்பிட்டு பேசினார். அதுகுறித்து இந்தப் பேட்டியில் நிர்மலா சீதாராமன் பேசினார்.

அவர், ‘ஒரு தொழிலதிபர், ஒரு புலம்பெயர் தொழிலாளி, ஒரு தொழில்முனைவோர் இவர்களில் யாரேனும் தொழில் செய்ய விரும்பினால் அவர்களது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள விரும்பினால், அவர்களுடைய கடின உழைப்புக்கு ஏற்றவாறு பொருளாதாரம் தூண்டப்படுவதற்கு உதவுவது என்னுடைய வேலை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் செயல்பாடு இருந்தது போன்று இந்திய தொழிலதிபர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு உள்ளது. இதுதான் இந்திய தொழில்முனைவோர்கள் வளர்ச்சியின் உத்வேகம். அதனால்தான், நான் அவர்களை, இந்தியவீரர்களால் செய்ய முடியாது என்று எல்லாரும் எண்ணிய நிலையில் அதனை செய்துமுடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: