Exclusive | வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக ஆர்.பி.ஐயுடன் பேச்சுவார்த்தையில் உள்ளோம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Exclusive | வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக ஆர்.பி.ஐயுடன் பேச்சுவார்த்தையில் உள்ளோம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக ஆர்.பி.ஐயுடன் தொடர் பேச்சுவார்த்தையில் உள்ளோம் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், நியூஸ்18 குழும தலைமை செய்தி ஆசிரியருக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ‘உத்வேகமுள்ள இந்தியாவுக்கு ஒரு வளர்ச்சிக்கான நிதி நிறுவனம் போதுமானது அல்ல. இந்தச் சட்டத் திருத்தம் வளர்ச்சிக்கான தனியார் நிதி நிறுவனங்கள் வருவதற்கு வழிவகுக்கும். நான், வளர்ச்சிக்கான தனியார் நிதி நிறுவனத்துக்கான இடத்தை உருவாக்கியுள்ளேன்.

இந்தப் பொருளாதாரத்துக்கு மேலும் பல திறமையான வங்கிகள் தேவைப்படுகின்றன. நாம் பின் தங்கியிருக்க முடியாது. வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக நாம் ஆர்.பி.ஐயுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து பொருளாதாரம் பழையை நிலைமைக்கு திரும்பி மீண்டும் நிலையான தன்மையை அடைவதற்கு காலம் தேவை. அந்த பொருளாதார காலத்தை நான் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: