செஞ்சுரி அடிப்பேன் என்றார் ஆனால் 0-வில் ஹிட் விக்கெட்:  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து காங். நகைச்சுவை

செஞ்சுரி அடிப்பேன் என்றார் ஆனால் 0-வில் ஹிட் விக்கெட்:  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து காங். நகைச்சுவை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (நன்றி : Reuters)

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தன் ட்விட்டர் பக்கத்தில், “முன்னோக்கிய பட்ஜெட். மத்திய அரசின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வாக்குறுதிக்கு வலுசேர்ப்பது” என்று கூறியுள்ளார். 

  • Share this:
செஞ்சுரி அடிப்பேன் என்றார் ஆனால் 0-வில் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்திருக்கிறார் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழங்கிய 2021-22 பட்ஜெட் குறித்து ஆளும் கட்சி ‘வளர்ச்சி நோக்கிய பட்ஜெட்’என்று புகழாரம் பாட எதிர்க்கட்சிகளோ இந்த பட்ஜெட் ஒன்றுக்கும் உதவாது என்ற ரீதியில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் பட்ஜெட்டை, ‘தற்சார்பு இந்தியாவுக்கானது, பொருளாதாரத்துக்கு வலுசேர்ப்பது’ என்று புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தன் ட்விட்டர் பக்கத்தில், “முன்னோக்கிய பட்ஜெட். மத்திய அரசின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வாக்குறுதிக்கு வலுசேர்ப்பது” என்று கூறியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் தன் ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை நகைச்சுவையாக, “செஞ்சுரி அடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு 0-வில் ஹிட்விக்கெட் ஆகி அவுட் ஆகி விட்டார். இதனை நூற்றாண்டின் பட்ஜெட் என்பதை விட நூற்றாண்டின் பெருந்தவரு என்றே குறிப்பிட வேண்டும்” என்று சாடியுள்ளார்.
Published by:Muthukumar
First published: