Budget 2021: மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Budget 2021: மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சாலை விரிவாக்கம்

விவசாயிகள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.

  • Share this:
தமிழ்நாட்டில் 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘மதுரையில் தொழில் வழித்தடம்’ என்ற பெயரில் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் தொழில்துறை முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் பயன்தரும் வகையில் அமையும்.

தமிழ்நாட்டில் இந்த திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று நிர்மாலா சீதாராமன் தெரிவித்தார். இதே போன்று கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழில்துறைக்கு பெரிய அளவில் உதவும் வகையில், இதுபோன்ற பிரதான சாலைகள் அமைக்கப்படும். இதனால், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாடு அடைவதற்கு பெரிதும் துணைபுரியும் என்று நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் இடம் பெயர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள அரசாங்கம் என்றார்.

மேலும்,  ஒருகோடியே ஐம்பது லட்சம் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், கப்பல்களை உடைத்து, புதிய கப்பல்களை கட்டும் தொழில் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published: