Home /News /national /

Budget 2021: பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்

Budget 2021: பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

    வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

    நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்திருப்பதாகவும் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

    வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... Union Budget 2021 : காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு அதிகரிப்பு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

    வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி வழங்கப்படும் என்றும் அப்போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Agriculture, Budget 2021, Nirmala Sitharaman, Union Budget 2021

    அடுத்த செய்தி