பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மிகுந்த எதிர்பாரப்புகளுக்கு இடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
கொரோனா தொற்று காலத்தின் நெருக்கடிகளுக்கு இடையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது பேப்பர் இல்லாத பட்ஜெட்டாக அறிமுகம் ஆவதால், நிதியமைச்சர் சிர்மலா சீதாராமன், டேப்லெட்டைக் கொண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றார்.
கொரோனா பரவல் ஏற்பட்ட மோசமான காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கடந்த ஆண்டு நான் தாக்கல் செய்தபோது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
Published by:Suresh V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.