• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Budget 2021 | பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2021? என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

Budget 2021 | பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2021? என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (நன்றி : Reuters)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (நன்றி : Reuters)

உள்நாட்டு உற்பத்தி, விவசாயத் துறை ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சுகாதார செலவினங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

  • Share this:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி 2021 - 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2021-22) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது.

கொரோனா எனும் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த ஆண்டு பட்ஜெட் வருவது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாதிப்புடன், இந்திய பொருளாதாரம் வரலாற்றிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப மந்தநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 29ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (President Ram Nath Kovind) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றவுள்ளார். இதையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் சீதாராமன் ஒரு உரையுடன் பட்ஜெட் தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது.

ஹல்வா நிகழ்வு

பட்ஜெட்டின் ஆவணங்களை அச்சிடும் செயல்முறையை குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நிதி அமைச்சகத்தால் ஒரு "ஹல்வா நிகழ்வு" ஏற்பாடு செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் விளக்கக்காட்சிக்கு 10 நாட்களுக்கு முன்னர் இந்த விழா நடத்தப்படும். இருப்பினும் தற்போது வெளியான அறிக்கையின்படி, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தை மீறி நிதியமைச்சகம் காகிதமில்லா பட்ஜெட் தாக்கலை வழிநடத்த உள்ளது. தொற்றுநோய் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சகம் அச்சிடாது என தகவல் அளித்துள்ளது.

2021 - பட்ஜெட்டின் எதிர்பார்ப்புகள்

கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் பொருளாதார மீட்சிக்கு நம்பகமான பாதை வரைபடத்தை வழங்குவதே பட்ஜெட் 2021 இன் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல மத்திய பட்ஜெட் 2021 ஒரு நிதி ஊக்கத்தை வழங்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்களும், நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர். இது போன்ற காலகட்டத்தில் அரசாங்கம் ஒரு இறுக்கமான நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதைப் நோக்கமாக கொண்டிருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஒரு தற்சார்பு பொருளாதாரத்தின் தேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த வருடத்திற்கான பட்ஜெட், உள்நாட்டு உற்பத்தி, விவசாயத் துறை ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சுகாதார செலவினங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் 3-வது பட்ஜெட் இதுவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: