Home /News /national /

#Exclusive | தனியார் அளிக்கும் பணம் கண்டிப்பாக முதலீடாக மட்டுமே இருக்கும் - நிர்மலா சீதாராமன்

#Exclusive | தனியார் அளிக்கும் பணம் கண்டிப்பாக முதலீடாக மட்டுமே இருக்கும் - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • News18
  • Last Updated :
    கடந்த 6 மாதங்களில், ஏராளமான முதலீட்டாளர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள், ஏனென்றால், அவர்கள் இந்தியாவை சிறந்த முதலீட்டு தளமாக பார்க்கின்றனர். அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினர் என்று நிதியமைச்சர் நியூஸ் 18-க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

    பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நியூஸ் 18 குழும செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

    "இந்தியா கடும் சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது, தனியார் நுகர்வு 7 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. எல்லா குறியீடுகளும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளன, நீங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது என்ன நினைத்தீர்கள், எல்லாவற்றையும் அதாவது வளர்ச்சி ஒரு புறமும் மற்றவை ஒரு புறமும் மனதில் வைத்துக் கொண்டிருந்தீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா ”கண்டிப்பாக. அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவது என்பது மத்திய அரசின் விருப்பம் இருந்தது. எல்லா துறைக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டது.

    நுகர்வை அதிகப்படுத்தவும், முதலீட்டுக்கு பணத்தை போடவும், தனியார் வளர்ச்சியடையும் வகையில் அவர்களின் முதலீட்டை ஊக்குவிக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. ஜூலை முதல் தற்போது வரையில் பொது முதலீட்டை எந்த வகையிலும் தடுக்க கூடாது என்று நினைத்தோம், இதனை நாங்கள் அதிகப்படுத்தவே செய்தோம். ஜூலை முதல் தற்போது வரையிலான தரவுகளை பார்த்தால் பொது முதலீடு அதிகரிக்கவே செய்துள்ளது.

    விநியோகம் தொடர்பான பிரச்னைகளை கவனிக்கும் நேரத்தில், நுகர்வையும் முதலட்டையும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏனெனில் தேவையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கைகளை எடுத்தோம்.” என்றார்.

    ”மக்களின் தேவை என்ற ஒரு புறத்திலும் பொருளாதாரத்தில் முதலீடுகள் இல்லாத நிலையில் எப்படி இந்த இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டீர்கள்?” என்ற கேள்விக்கு, “எனவே தான் எனது பட்ஜெட் உரையை தொடங்கும் போதே, தனியார் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றும், நிறுவன வரி குறைத்ததின் மூலம் அரசின் எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன். நிறுவன வரி தற்போது மிகக் குறைந்த அளவில் உள்ளது. இதை சுட்டிக் காட்டி தனியார் நிறுவனங்களை அவர்களே முடிவு செய்யுமாறு வலியுறுத்தினோம். தனியார் அளிக்கும் பணம் கண்டிப்பாக முதலீடாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

    பிரதமர் தனது சுதந்திர தின உரையிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்தார். ஆனால், நாங்கள் இதற்காக காத்திருக்கவில்ல, மாறாக மாநிலங்களுடனும் தனியார் நிறுவனங்களுடனும் பேசி 6500 திட்டங்களை கொண்டு வந்தோம். இத்திட்டங்கள் அனைத்து மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்போடு மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தினால் மட்டுமே சிறந்த சூழலை உருவாக்க முடியும்.

    முதலாவதாக கட்டமைப்பு துறையில் சொத்துக்களை உருவாக்கினோம், இது சிமெண்ட், ஸ்டில் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதையும் உறுதி செய்தோம். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும்

    இந்த வகையில் தான் பணம் மூதலீடுகளை சென்றடைவதை அரசு உறுதிப்படுத்தியது. ஒரு முதலீட்டுக்கு நிறைய ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

    கடந்த 6 மாதங்களில், ஏராளமான முதலீட்டாளர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள், ஏனென்றால், அவர்கள் இந்தியாவை சிறந்த முதலீட்டு தளமாக பார்க்கின்றனர். அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினர். அவர்களுக்காக திட்டங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    அவர்கள் வந்த பிறகு திட்டங்களை தேடிக் கொண்டிருக்க முடியாது. முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளும் அளிக்கப்பட்டன. அவர்கள் கட்டமைப்பு துறையில் முதலீடு செய்தால் அவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலீட்டார்களுக்கு இவை அனைத்தும் தயாராக வைக்கப்பட்டது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
    Published by:Sankar
    First published:

    Tags: Budget 2020, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி