Budget 2019 நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி

Budget 2019: 2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மீனவர்களின் நலன்களை காக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

news18
Updated: February 1, 2019, 11:39 AM IST
Budget 2019 நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி
பியுஷ் கோயல்
news18
Updated: February 1, 2019, 11:39 AM IST
சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்கள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட் மீதான உரையில் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

2 ஹெக்டேர்களுக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி. மூன்று தவனைகளில் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். சுமார் 12 கோடி விவசாயிகள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மீனவர்களின் நலன்களை காக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...