Budget 2019: பசுக்களுக்கு நலத்திட்டம்... மீனவர்களுக்கு தனி அமைச்சகம்... பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்...!

Union Budget 2019: மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும். ஜன்தன் யோஜனா திட்டத்தில் 34 கோடி சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

news18
Updated: February 1, 2019, 1:05 PM IST
Budget 2019: பசுக்களுக்கு நலத்திட்டம்... மீனவர்களுக்கு தனி அமைச்சகம்... பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்...!
பட்ஜெட் சூட்கேஸ்
news18
Updated: February 1, 2019, 1:05 PM IST
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்:

2018-19-ல் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 11.68 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கோகுல் இயக்கத்திற்கான ஒதுக்கீடு 750 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துக்கென தனி துறை அமைக்கப்படும்.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைக்கப்படும். பசுக்களுக்கான நலத் திட்டங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இரண்டு சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படும்.

கடன்களை உரிய நேரத்தில் செலுத்துபவர்களுக்கு மேலும் மூன்று சதவீதம் சலுகை அளிக்கப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.

உலகிலேயே மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமான பிரதம மந்திரி சிரம் யோகி திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும்.

மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம், 500 கோடி ரூபாய் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனாளிகள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், 6 கோடி இலவச எரிவாயு இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
Loading...
முத்ரா திட்டத்தின்கீழ், 15.56 கோடி பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீத பயனாளிகள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில் முனைவோரிடமிருந்து 3 சதவீத பொருட்களை அரசு நிறுவனங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு மூன்று லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.

உதான் திட்டத்தின் மூலம் சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 27 கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. முதல் முறையாக உள்நாட்டு நீர்வழித் தடத்தில் சரக்குப் பெட்டகம் கையாளப்பட்டு வருகிறது.

சூரிய சக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மூலதனச் செலவு ரூ. 1.58 கோடியாக இருக்கும். ரயில்வே துறைக்கான மத்திய அரசின் உதவி 64 ஆயிரத்து 587 கோடி ரூபாயாக இருக்கும். வடகிழக்கு மாநிலங்கள் உரிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்

வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒதுக்கீடு 58 ஆயிரத்து 166 கோடியாக அதிகரிக்கப்படும். ஒரு லட்சம் கிராமங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.

மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும். ஜன்தன் யோஜனா திட்டத்தில் 34 கோடி சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

வரி வருவாய் இந்த ஆண்டு இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டு 12 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வரி கட்டமைப்பில் 80 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது. வரி கணக்கு எண்ணிக்கை தாக்கல் செய்வது 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது.
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...