Budget 2019: ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை

Budget 2019: மேலும், ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி சட்டப்பிரிவு 80 சி கீழ் வரிவிலக்கு பெறலாம்.

news18
Updated: February 1, 2019, 3:36 PM IST
Budget 2019: ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை
பியுஷ் கோயல்
news18
Updated: February 1, 2019, 3:36 PM IST
ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்று மத்திய இடைக்கால பட்ஜெட் மீதான உரையில் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 2 ஹெக்டேர்களுக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி. மூன்று தவனைகளில் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். சுமார் 12 கோடி விவசாயிகள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மீனவர்களின் நலன்களை காக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும். பி.எஃப் சந்தாதார்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாலர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கொண்டுவரப்படும். ரூ.3 லட்சம் வரை கிடைக்கும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி சட்டப்பிரிவு 80 சி கீழ் வரிவிலக்கு பெறலாம்.

மருத்துவ செலவுகளில் ரூ.50 ஆயிரம் வரை கணக்கில் காட்டி விலக்கு பெறலாம். இதன் மூலம் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...