பட்ஜெட் 2019 - வரிகள் அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்கிறது

இந்தியாவின் தங்க சந்தை முழுவதும் இறக்குமதியை சார்ந்தே இருப்பதால், இந்த வரி உயர்வு தங்கத்தின் மீதான விற்பனையை விலையை அதிகரிக்கச் செய்யும்.

பட்ஜெட் 2019 - வரிகள் அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்கிறது
நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: July 5, 2019, 2:33 PM IST
  • Share this:
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வரிகள் அதிகரிப்பு காரணமாக தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, அரசின் அடுத்த 5 ஆண்டு திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 10-ல் இருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் தங்க சந்தை முழுவதும் இறக்குமதியை சார்ந்தே இருப்பதால், இந்த வரி உயர்வு தங்கத்தின் மீதான விற்பனையை விலையை அதிகரிக்கச் செய்யும். வெள்ளி விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1  சுங்க வரி மற்றும் ரூ.1 செஸ் வரியாக கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தொடர்பான முழு தகவல்களுக்கு கிளிக் செய்க... 

 
First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்