Home /News /national /

‘என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!

‘என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!

BSP Worker Cries

BSP Worker Cries

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை வைத்து தனது கட்சி காமெடி செய்துவிட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் ஒருவர் கதறி அழுதிருக்கிறார்.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் செய்தியாளர்களிடையே கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம், கட்சித் தாவல்கள் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும், நாட்டிலேயே அதிக தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல், அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு தேர்தலாக மாறியிருக்கிறது.

    அங்கு ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெரும் முனைப்பில் களப்பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பாஜகவுக்கு கடுமையான சவால் அளித்து வருகிறது. இது தவிர காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் உத்தரப் பிரதேசத்தில் ஓரளவு செல்வாக்குடன் திகழ்கின்றன.



    சமீப நாட்களாக ஆளும் பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அடுத்தடுத்து பலரும், பாஜகவில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் உ.பி அரசியலில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை வைத்து தனது கட்சி காமெடி செய்துவிட்டதாக கூறி அக்கட்சிப் பிரமுகர் ஒருவர் கதறி அழுதிருக்கிறார்.

    Also read:  கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் விடுவிப்பு.. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி!

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி நேற்று ட்விட்டர் மூலமாக மேற்கு உ.பியின் Charthawal மற்றும் Gangoh ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். Charthawal தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட Salman Sayeed காங்கிரஸ் கட்சியில் இருந்து முந்தைய நாள் தான் விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். இவர் முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான இம்ரான் மசூத்தின் சகோதரர் ஆவார்.

    இதனிடையே Charthawal தொகுதியில் தன்னை தான் வேட்பாளர் என 2018ம் ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென வேறு நபரை வேட்பாளராக்கிவிட்டனர். ‘பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் என்னை வைத்து காமெடி செய்துவிட்டனர்’ என கூறி அக்கட்சியின் பிரமுகர் அர்ஷத் ராணா கதறி அழுதார். அவரால் அழுகையை அடக்கவே முடியவில்லை.

    Also read:  மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு

    அர்ஷத் ராணா அழுதவாறே கூறியவதாவது, “நான் 24 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். 2018ம் ஆண்டே Charthawal தொகுதி வேட்பாளராக முறைப்படி கட்சியால் அறிவிக்கப்பட்டேன். இதற்காக 50 லட்ச ரூபாய் தரச்சொன்னார்கள். நான் ஏற்கனவே 4.5 லட்சத்தை கொடுத்திருக்கிறேன். ஆனால் கடைசி நேரத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என ராணா அழுதுகொண்டே கூறினார். பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    Gangoh தொகுதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நோமன் மசூத்தும், வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் தான் லோக் தளம் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜில் இணைந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரஷீத் மசூத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி