Home /News /national /

அகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி!

அகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் - தவிப்பில் மாயாவதி!

மாயாவதி,

மாயாவதி,

கடந்த சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தற்போது 7 எம்.எல்.ஏக்களை மட்டுமே தக்க வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதிக்கு தற்போது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவின் குறிப்பிடத்தக்க பெண் அரசியல் ஆளுமைகளில் ஒருவரான மாயாவது, பட்டியலினத் தலைவராக விளங்குகிறார்.

இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் முக்கியக் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்துவது என்றால் லேசுப்பட்ட காரியம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் மாநில முதல்வராக உயர்ந்த மாயாவதி சமீப காலங்களில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் கசப்பான பக்கங்களை பார்த்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தற்போது 7 எம்.எல்.ஏக்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 எம்.எல்.ஏக்களை அக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் மாயாவதி. பல எம்.எல்.ஏக்களும் மாயாவதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Also Read:   ரிக்கி பாண்டிங்கின் இந்த உலக சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அங்கு மாயாவதியின் கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் இவர்கள் சமாஜ்வாதியில் இணையலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read:   ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்? விளக்கம் அளித்த ட்விட்டர்!

அதே நேரத்தில் பகுஜன் சமாஜின் சட்டமன்றக் குழுத் தலைவர் லால்ஜி வெர்மா இந்த மாதத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். லால்ஜி தலைமையிலான 12 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களை தனி குழு அல்லது கட்சியாக கருதுமாறு கோரி கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். இதன் காரணமாக எம்.எல்.ஏக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக பகுஜன் சமாஜை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாயாவதி அதிருப்தியடைந்துள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட லால்ஜி மற்றும் ராம் அச்சல் ராஜ்பர் ஆகிய இருவரும் பகுஜன் சமாஜின் நிறுவன தலைவர்களாவர். லால்ஜி அகிலேஷ் யாதவ் கட்சியிலும், ராஜ்பர் பாஜகவிலும் இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பகுஜன் சமாஜின் ஒரு எம்.எல்.ஏ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Akhilesh Yadav, Bahujan Samaj Party, Mayawati, Uttar pradesh

அடுத்த செய்தி