• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாகிஸ்தானியே இங்கேவா... டெல்லியில் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட இஸ்லாமிய ராணுவ வீரர் இல்லம்

பாகிஸ்தானியே இங்கேவா... டெல்லியில் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட இஸ்லாமிய ராணுவ வீரர் இல்லம்

ராணுவ வீரர் இல்லம்

ராணுவ வீரர் இல்லம்

  • Share this:
    பாகிஸ்தானியே இங்கேவா... நாங்கள் உங்களுக்கு குடியுரிமை தருகிறோம் என்று இஸ்லாமிய ராணுவ வீரரின் குடும்பத்தினரை நோக்கி வன்முறையாளர்கள் அழைத்து வீட்டுக்கு தீவைத்து எரித்துள்ளனர்.

    டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய வன்முறை இரண்டு நாள்களுக்கு நீடித்தது. வடகிழக்கு டெல்லியின் மௌஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை பெருமளவுக்கு நடைபெற்றது. இஸ்லாமியக் குடியிருப்புகள் பெருமளவுக்கு தீக்கிரையாக்கப்பட்டன.

    டெல்லியின் காஜுரி காலி பகுதியில் அமைந்துள்ளது ராணுவ வீரர் மோஹத் அனிஸ் என்பவரது வீடு உள்ளது. பிப்ரவரி 25-ம் தேதி அந்தப் பகுதிக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அந்த பகுதிகளிலுள்ள வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியது. அனிஸின் வீட்டு வாசலில் அவர் ராணுவ வீரர் என்ற பதாகை மாட்டப்பட்டிருக்கும். இருந்தும், அங்கே நின்ற வன்முறைக் கும்பல், அவர் வீட்டு வாசலிலிருந்து காரை முதலில் தீ வைத்துக் கொளுத்தினர்.

    பின்னர், வீட்டை நோக்கி கற்களை வீசினர். அதன்பிறகு, ‘இங்கே வா பாகிஸ்தானியே... உனக்கு நாங்கள் குடியுரிமை தருகிறோம்’ என்று கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், கேஸ் சிலிண்டரைத் திறந்துவீட்டு வீட்டைத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். அப்போது வீட்டில், அனிஸ், மற்றும் அவரது அப்பா மோஹத் முனிஸ், மாமா மோஹத் அகமது அவரது உறவினர் நேஹா பர்வீன் ஆகியோர் இருந்துள்ளனர். வீடு தீப் பற்றத் தொடங்கியுடன் அவர்கள் துணை ராணுவப் படையின் உதவியுடன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்த இரண்டு தெருக்களிலுமுள்ள 35 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

    அந்த தெருவில் இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் வீடு மட்டுமே தீக்கிரையாகாமல் இருந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த ராணுவ வீரர் குடும்பம், ‘எங்களுடைய பணம், நகை, வீட்டிலிருந்த பொருள்களை அனைத்தையும் இழந்துவிட்டோம். திருமணத்துக்காக தவணை முறையில் நகை வாங்கியிருந்தோம். திருமணத்துக்காக 3 லட்ச ரூபாய் வைத்திருந்தோம். அனைத்தையும் இழந்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: