கர்நாடகா முன்னாள் முதல்வரும்
பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எடியூராப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகளான சவுந்தர்யாவுக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. 30 வயதான சவுந்தர்யா பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மத்திய பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் கல்லூரியில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருவருக்கும் 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் மனிவிசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
எடியூராப்பாவின் பேத்தி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.