• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

  • Share this:
    கர்நாடக முதல்வர் பதவியை  ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

    கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்று இன்றுடன்  2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: