20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி... பொறுத்திருந்து பாருங்கள்...! எடியூரப்பா சூசகம்

சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்றாலும் பெரும்பான்மை இல்லாததால் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா 3 நாட்களில் ராஜினாமா செய்தார்.

20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி... பொறுத்திருந்து பாருங்கள்...! எடியூரப்பா சூசகம்
எடியூரப்பா
  • News18
  • Last Updated: May 10, 2019, 12:43 PM IST
  • Share this:
கர்நாடக காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு மீது 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்றாலும் பெரும்பான்மை இல்லாததால் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா 3 நாட்களில் ராஜினாமா செய்தார்.

மஜத தலைவர் குமரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவியேற்றார். கூட்டணி ஆட்சி என்பதால், அடிக்கடி உரசல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.


இதயும் படிங்க... தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளருக்கு இளம்பெண் முத்தம் 

எனினும், விரிசல் பெரிதானால் அதில் பாஜக ஆதாயம் அடையும் என்பதால் எழும் பிரச்னைகள் உடனுக்குடன் பேசித்தீர்க்கப்படுகிறது. எடியூரப்பா அவ்வப்போது, சில நாட்களில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறிக்கொண்டே வருகிறார்.

இந்நிலையில், “20-க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்” என்று எடியூரப்பா இன்று கூறியுள்ளார்.பாலகோட் விமான தாக்குதலால் பாஜகவுக்கு கர்நாடகாவில் 22 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று பேசி சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சையில் எடியூரப்பா சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading