பட்டியலின மக்களுக்கு சேவை செய்ய மறுக்கும் சலூன்கள் - கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று முடிவெட்டும் சகோதரர்கள்

மைசூரு மாவட்டத்தில் உள்ள கபசோஜ் கிராமத்தில் வசித்து வரும் இரு சகோதரர்கள் கத்தரிக்கோல் மற்றும் ரேஸர்களை கொண்டு வீடு வீடாக சென்று முடித்திருத்தம் செய்து வருகின்றனர்.

மைசூரு மாவட்டத்தில் உள்ள கபசோஜ் கிராமத்தில் வசித்து வரும் இரு சகோதரர்கள் கத்தரிக்கோல் மற்றும் ரேஸர்களை கொண்டு வீடு வீடாக சென்று முடித்திருத்தம் செய்து வருகின்றனர்.

 • Share this:
  கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு அருகே ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர், தங்கள் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்காக ஹீரோக்களாக மாறியுள்ளனர். ஹீரோக்கள் என்றதும் சினிமா ஹீரோக்கள் என்று நினைத்து விடாதீர்கள். பிறருக்கு உதவி செய்யும் செய்யும் அனைவருமே இங்கே ஹீரோக்கள் தான். மைசூரு மாவட்டத்தில் உள்ள கபசோஜ் கிராமத்தில் வசித்து வரும் இரு சகோதரர்கள் கத்தரிக்கோல் மற்றும் ரேஸர்களை கொண்டு வீடு வீடாக முடிதிருத்தும் செய்து வருகின்றனர்.

  கபசோஜ் மற்றும் அதன் அருகில் இருக்கும் கிராமங்களான குருஹுண்டி, கவுடராஹுண்டி மற்றும் மதனஹள்ளி போன்ற கிராமங்களில் இருக்கும் ஆண்களுக்கும் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்து வருகின்றனர். ஹேர்கட் மட்டுமின்றி ஷேவிங் உட்பட அனைத்து வகையான முடிதிருத்தும் சேவைகளையும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.

  தலித் சமூகத்தை சேர்ந்த கே.பி. மகாதேவா மற்றும் கே.பி. சித்தராஜு ஆகிய இரு சகோதரர்களும், தங்களது சமூக மக்களுக்காக ஹேர்கட் உள்ளிட்ட முடி திருத்தும் சேவைகளை வீடு வாசல்களுக்கே (doorstep service) சென்று வழங்க வருகின்றனர். இந்த சகோதரர்கள் முடிதிருத்தும் சேவைகளை வழங்கி வரும் பகுதிகளில் வசித்து வரும் பெரும்பான்மைமக்கள் தலித் சமூகத்தினர் ஆவர். இவர்கள் முடிதிருத்தம் செய்வது கடினமாக இருந்ததாக கூறுகின்றனர். சில சமயங்களில் பலவிதமான பிரச்சனைகளால் கிராமத்தினுள் இருக்கும் முடிதிருத்தும் கடைகள் தலித் சமூக மக்களுக்கு அனுமதி மறுத்து விட்டனர்.

  இதனை அடுத்து ஹேர்கட் அல்லது ஷேவிங் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் உல்லாஹள்ளி அல்லது நஞ்சங்குட் நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. முடிதிருத்தும் சேவைகளை பெற நகரத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்து சென்று வந்தால் அன்றைய தினம் அவர்களால் வேளைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹேர்கட் செய்ய சென்றால் அன்று ஒரு நாள் சம்பளத்தை இழக்க நேரிட்டது. இதனை அடுத்து இந்த 2 சகோதரர்கள் வழங்கி வரும் டோர் ஸ்டெப் சேவையை பயன்படுத்தி முடிதிருத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல், வேலைக்கும் சரியாக சென்று வருமானத்தை இழக்காமல் இருக்கின்றனர் இந்த கிராம மக்கள்.

  இது குறித்து பேசிய சகோதர்களில் ஒருவரான மகாதேவா, எங்களது இந்த சேவை எங்கள் சமூக ஆண்களுக்கு பணம் சம்பாதிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், சமூக நல்லிணக்கத்தை பேண உதவுவதோடு, கிராமங்களில் உள்ள சமூகங்களுக்கிடையில் விரோதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக குறிப்பிட்டார். சமூக பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சியில் கிராமங்களில் தலித் காலனிகளில் மிகச்சிறந்த சலூன் கடைகளை வைக்க விரும்புவதாக மகாதேவா கூறியுள்ளார்.

  கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலிருந்து சகோதர்கள் தங்கள் டோர் ஸ்டெப் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஹேர்கட் செய்ய ரூ .40, ஷேவ் செய்ய ரூ .20 வசூலிக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் சகோதரர்கள் தங்கள் சமூக மக்களுக்கு ஏற்படும் இது போன்ற எந்தவொரு பிரச்சனைகளையும் போக்க அரசாங்கம் தங்களுக்கு நிதியுதவி வழங்கினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் தலித் மக்கள் பெருபான்மையாக வாழும் இடங்களில் சலூன் நிலையங்களை திறக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... திருச்சி சிறப்பு முகாமில் 18 பேருக்கு கொரோனா.. இப்போதாவது விடுதலை செய்யுங்கள் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

  ஆனால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். தலித்கள் அதிகம் உள்ள கிராமங்களில் சலூன் கடைகளை அமைக்கும் சாத்தியம் இருக்கும் வரை நாங்கள் தொடர்ந்து வீட்டு வாசலில் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். எங்களின் வேண்டுகோள் அரசியவாதிகளின் காதுகளுக்கு கேட்டு அவர்கள் உதவினால் தலித் மக்களுக்கான சலூன் சேவைகளை கடைகளில் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: