14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் தம்பி.. நெஞ்சை தொடும் அண்ணனின் பாச போராட்டம்..

படித்தப்படுக்கையாக இருக்கும் லிஜோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஆண்டுகளாக வெண்டிலேட்டர் உதவியுடன் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தம்பியை தன்னந்தனியாக பாதுகாத்து வருகிறார் ஒரு பாசக்கார அண்ணன். 

  • Share this:
    படுக்கையில் இருக்கும் லிஜோ, தமிழக - கேரள எல்லை பகுதியான பாறசாலை என்னுமிடத்தில் தனது அண்ணன் விபினின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். லிஜோவுக்கு 19 வயது இருக்கும் போது வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு கழுத்திற்கு கீழ் உடல்பகுதி முழுவதும் செயல் இழந்துவிட்டது. பி.டெக் படிக்க ஆயத்தமாகி கொண்டிருந்த லிஜோ படுத்த படுக்கையாகி விட்டார். அன்று முதல் வென்டிலேட்டர் உதவியுடன் மற்றொருவர் கண்காணிப்பில் மட்டுமே வாழமுடியும் என்ற நிலைக்கு லிஜோ தள்ளப்பட்டார். தம்பியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நினைத்த அண்ணன் விபின் பணத்தேவைக்காக தனது சொத்து அனைத்தையும் விற்றதோடு, லிஜோவின் அருகிலேயே 14 ஆண்டுகளாக இரவு பகலாக பாதுகாத்து வருகிறார். இரவில் கூட தம்பி தன்னை அழைக்க மைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வீடு முழுக்க ஸ்பீக்கர் அமைத்து கண்ணும் கருத்துமாக தம்பியை காத்து வருகிறார் விபின்.

    வேலைக்குச் செல்ல முடியாது, செலவு செய்ய சொத்தோ, பணமோ கிடையாது, பராமரிக்க தாய், தந்தை இல்லை. இது போதாதென லிஜோ, விபினுடன் பிறந்த இரு சகோதரிகளும் குடும்ப சூழலால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பல போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கும் விபின், தனது இரு குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் தவித்து வருகிறார்.

    மேலும் படிக்க...கறுப்பர் கூட்டத்தினர் மீதான குண்டர் சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்



    விபினின் இந்த பாசப்போராட்டம் குறித்து தெரியவந்து, மனித உரிமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஸ்ரீஜேஷ் என்பவர் உதவ முன்வந்திருக்கிறார். இது குறித்து பேசும் அவர் மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கும் விபினின் வாழ்க்கையை பார்த்து தான் அதிர்ந்து போய்விட்டதாக கூறுகிகிறார். தம்பிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து நிற்கும் அண்ணன் விபினுக்கு உரிய உதவி கிடைக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் 7 ஜீவன்களுக்கும் அது போய்ச்சேரும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: