முகப்பு /செய்தி /இந்தியா / கர்ப்பிணி அக்காவின் தலையை துண்டாக்கி செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய தம்பி - கொடூரம்

கர்ப்பிணி அக்காவின் தலையை துண்டாக்கி செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய தம்பி - கொடூரம்

கொலை செய்யப்பட்ட கீர்த்தி

கொலை செய்யப்பட்ட கீர்த்தி

கர்ப்பிணியான கீர்த்தியின் தலையை துண்டித்த தாயும், மகனும் தலையில்லாத உடலுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • Last Updated :

உடன் பிறந்த கர்ப்பிணி அக்காவின் தலையை துண்டித்த மைனர் சிறுவன் ஒருவன், செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்யும் பெண்களை, பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் கெளரவத்துக்காக கொலை செய்யப்படும் நிகழ்வுகள் சமூக அவலங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தங்களின் மரியாதையை கெடுத்துவிட்டதாக கருதும் பெற்றோர், தாங்கள் சீராட்டி வளர்த்த பெண்களையே துடிதுடிக்க கொலை செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணை அவரின் தாயும், சகோதரரும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கயாகோன் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தி என்ற பெண் (வயது 21) அதே ஊரைச் சேர்ந்த அவினாஷ் தோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கடந்த ஜுன் 21ம் தேதி வைஜாபூரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Also read:  உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்ற கேரளாவின் ஸ்ருதி சித்தாரா

காதல் திருமணம் செய்த ஜோடி, தங்கள் சொந்த ஊரான கயாகோனுக்கே திரும்பி வந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் கீர்த்தி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையறிந்த கீர்த்தியின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன் தன் மகளை சென்று பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் தனது மகளை பார்ப்பதற்காக தனது மைனர் மகனுடன் சென்றிருக்கிறார். தம்பியும், அம்மாவும் வீட்டுக்கு வந்திருந்ததால் சமையலறைக்கு சென்ற கீர்த்தி இருவருக்கும் டீ போட்டுக்கொண்டிருந்தார்.

திடீரென அங்கு வந்த கீர்த்தியின் அம்மா கீர்த்தியின் கால்களை பிடித்துக் கொள்ள, அவரின் மைனர் மகன் தன்னிடம் இருந்த அரிவாளால் கீர்த்தியின் தலையை துண்டாக வெட்டி தனியாக எடுத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த கீர்த்தியின் கணவர் அவினாஷையும் கொலை செய்ய முயற்சித்ததால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று கூச்சல் போட்டு பிறரை உதவிக்கு அழைத்தார்.

கர்ப்பிணியான கீர்த்தியின் தலையை துண்டித்த தாயும், மகனும் தலையில்லாத உடலுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தலையை கையில் எடுத்துக் கொண்டு அந்த கிராமத்தில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் பார்க்கும் வகையில் நடந்து சென்றிருக்கிறார்கள். பின்னர், தாயும், 18 வயது நிரம்பாத மைனர் சிறுவனும் காவல்நிலையத்துக்கு சென்று சரண்டர் ஆகியிருக்கின்றனர்.

top videos

    கெளரவத்துக்காக அரங்கேறியிருக்கும் இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Honour killing, Maharashtra, Murder