தங்கையிடம் முத்தம் கேட்ட இளைஞர்: லாட்ஜிக்கு வரவைத்து அடி வெளுத்து அனுப்பிய அண்ணன் - வைரலாகும் வீடியோ

Youtube Video

ஆந்திர மாநிலத்தில் ராங்கால் செய்த பெண்ணிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞரை அந்தப் பெண்ணின் அண்ணன் உள்ளிட்டோர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எஸ்.பி. ஐ காலனியை சேர்ந்த இளைஞர் மகேஷ். அவருக்கு கடந்த வாரம் இளம்பெண் ஒருவரிடம் இருந்து ராங் கால் வந்தது.

    அந்தப் பெண்ணின் எண்ணைப் பதிவு செய்து கொண்ட மகேஷ் அவருக்குத் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட்டால் தான் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார்.

    மகேஷின் தொல்லை தாங்க முடியாத அந்தப் பெண் நடந்ததை தனது அண்ணனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அண்ணன், மகேஷுக்குப் பாடம் கற்பிக்க திட்டமிட்டார்.

    அண்ணனின் யோசனைப்படி, மகேஷை மதனப்பள்ளியில் உள்ள லாட்ஜில் குறிப்பிட்ட எண்ணுள்ள அறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் இளம்பெண்.

    அதை நம்பிய மகேஷும் ஆசை ஆசையாக, அந்த லாட்ஜுக்கு சென்றபோது அறையில், இளம்பெண்ணின் அண்ணன், 5 ரவுடிகளுடன் காத்திருந்தார்.

    முழு போதையில் இருந்த அந்தக் கும்பல், மகேஷை பஞ்சு மெத்தையில் படுக்கப் போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்; அதை தங்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் மகேஷ் அழுதபடி கெஞ்சவும், அந்த ரவுடி கும்பல் அவரை விட்டு விட்டது. அடி வாங்கியதை மகேஷ் வெளியில் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், ரவுடிக் கும்பல் தாங்கள் பதிவு செய்த வீடியோவை நண்பர்களிடையே பகிர்ந்துள்ளனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி போலீசார் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மகேஷிடம் புகார் எழுதி வாங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தவறான அழைப்பில் வந்த இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞர் சரமாரியாகத் தாக்கப்படும் வீடியோ காட்சிகள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: