டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து பிரியாணி விற்பனை கிடுகிடுவென உயர்வு!

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து பிரியாணி விற்பனை கிடுகிடுவென உயர்வு!
  • News18
  • Last Updated: February 12, 2020, 1:43 PM IST
  • Share this:
டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றதையடுத்து பிரியாணி விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளுள் 62 தொகுதிகளை வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

ஆம் ஆத்மி வெற்றியை அதன் ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் சூழலில், வித்தியாசமான கொண்டாட்டம் தற்சமயம் டெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது.


தெற்கு டெல்லியின் ஷாஹீன் பாகில் சிஏஏ-வுக்கு எதிராகப் போராடுவோருக்கு ஆம் ஆத்மி கட்சி பிரியாணி வழங்குவதாக உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக-வின் மூத்த தலைவர்கள் சிலர் கூறி வந்தனர். இந்தப் பின்னணியில், ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கெஜ்ரிவாலின் வெற்றியை பிரியாணியுடன் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தனர்.

இதையெடுத்து, பலரும் பிரியாணி சாப்பிட்டு தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். நேற்றில் இருந்து பிரியாணி விற்பனை பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பிரியாணி ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் போன்ற ஆஃபர்களை சில நிறுவனங்கள் வழங்கியுள்ளன. டெல்லியில் தற்போது பிரியாணி விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது என்கிறார்கள்.

Also see:

 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்