நாய்களுக்காக கேரளாவில் தங்கிய லண்டன் தம்பதி - 140 நாய்கள் தத்தெடுப்பு!

நாய்களுக்காக கேரளாவில் தங்கிய லண்டன் தம்பதி

தாங்கள் சென்ற பிறகு நாய்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? என சிந்தித்து லண்டனுக்கு திரும்பும் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். கோவளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை எடுத்த அந்த தம்பதி, அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவெடுத்து, தெரு நாய்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

  • Share this:
லண்டனில் இருந்து விடுமுறைக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வந்த தம்பதி, தெருநாய்களைக் காப்பாற்றுவதற்காக இங்கேயே தங்கி சேவை செய்து வருகின்றனர்.

லண்டனைச் சேர்ந்த தம்பதி 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். கோவளம் கடற்கரைப் பகுதியில் சுற்றிப்பார்த்த அவர்கள், அங்கு 2 தெருநாய்கள் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த நாய்கள் மெலிந்து, உணவில்லாமல் இருப்பதை பார்த்து பரிதாபப்பட்ட தம்பதி, நாய்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். பின்னர், தாங்கள் சென்ற பிறகு நாய்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? என சிந்தித்து லண்டனுக்கு திரும்பும் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். கோவளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை எடுத்த அந்த தம்பதி, அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவெடுத்து, தெரு நாய்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய மேரி (Mary) மற்றும் அவரது கணவர் ஸ்டீவ் மஸ்கிராப்ட் (Steve Muscroft ), தங்களின் பயணம் குறித்தும் இந்தியாவில் தங்கியது குறித்தும் மனம் திறந்துள்ளனர். லண்டனில் வசிக்கும்போது மிடில்செக்ஸ் (Middlesex ) பகுதியில் செயல்பட்டு வரும் விலங்குகள் வதை தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான RSPCA -வில் மேரி தன்னார்வ உறுப்பினராக இருந்துள்ளார். "நாங்கள் லண்டனில் வசித்து வந்தோம். நான் அங்கு செயல்பட்டு வரும் Royal Society for the Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். விடுமுறையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா வந்தோம்.

ALSO READ :  சீனாவில் சர்வ சாதாரணமாக ரயிலில் பயணம் செய்யும் கால்நடைகள்-வைரலாகும் வீடியோ!

அப்போது, கோவளம் பகுதியில் தெரு நாய்களின் நிலையை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. உடனடியாக அவற்றுக்கு உதவி செய்ய முடிவெடுத்தோம்" என மேரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மேரி, " 2 நாய்களுக்கு உதவி செய்தபோதும், அவைகளை பாதுகாக்க யாரும் முன்வரவில்லை. தனியாக அவற்றை விட்டுச்செல்ல மனம் இல்லாததால் நாய்களுக்காக, அங்கேயே குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவரும் நானும் தங்கிவிட்டோம். அன்று முதல் இன்று வரை தெரு நாய்களுக்கு உதவி செய்து வருகிறோம். 2 நாய்களில் தொடங்கிய தங்களின் பயணம் தற்போது 140 தெரு நாய்களாக வளர்ந்துள்ளது.

நாய்களை தத்தெடுத்து அவற்றுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என கூறினார். நாய்களை பராமரிக்க தேவையான பண உதவியை உள்ளூர் மக்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்று, இந்தப் பணியை செய்து வருகிறோம் என மேரியன் கணவர் ஸ்டீவ் மஸ்கிராப் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக தெரிவித்த அவர், தொடர்ந்து இந்த சேவையை செய்ய தங்களுக்கு பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

ALSO READ : செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் பெல்ஜிய கலைஞர் - வீடியோ

நாய்கள் குட்டியிடுவதை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தவும் நிதி உதவி வேண்டும் என ஸ்டீவ் மஸ்கிராப்ட் - மேரி தம்பதி கூறியுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள், இதுவரை 32 லட்சம் ரூபாய்க்கும் மேல் தங்களின் சொந்தப் பணத்தை செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நாய்களின் மேல் கொண்ட அன்பால், சொந்த நாட்டுக்கு திரும்பாமல் 12 ஆண்டுகளாக கேரளாவிலேயே தங்கியிருக்கும் லண்டன் தம்பதியின் சேவை, விலங்குகள் நல ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: