முகப்பு /செய்தி /இந்தியா / ஓட்டல்களின் மெனுவில் இருந்து கத்திரிக்காய் டிஷ் அதிரடி நீக்கம்..

ஓட்டல்களின் மெனுவில் இருந்து கத்திரிக்காய் டிஷ் அதிரடி நீக்கம்..

Brinjal

Brinjal

பல உணவகங்கள் தங்கள் மதிய உணவு மெனுவில் இருந்து பிரபலமான கத்தரி கறியை நீக்கி உள்ளன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கர்நாடக மாநிலத்தில் திடீரென கத்திரிக்காய் விலை ஏற்றம் கண்டு 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருவதால் ஓட்டல்களில் சாப்பாடு மெனுவில் இருந்து கத்திரிக்காய் உணவு வகைகள் நீக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கத்திரிக்காய் பரவலாக பயன்படுத்தம் காய்கறி வகையாகும். சைவ, அசைவ பிரியர்கள் என இரு பிரிவினரும் கத்திரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் உணவு வகைகளை விரும்பி ருசிப்பார்கள். ‘வாங்கிபாத்’, ‘யெங்காய்’ போன்ற கத்திரிக்காய் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் வட கர்நாடக பகுதிகளில் தினசரி அளவில் அதிகம் பேரால் ருசிக்கப்படும் உணவு வகைகளாகும்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சமீப நாட்களாக கத்திரிக்காயின் விலை கணிசமாக அதிகரித்து வந்தது. மொத்த விலை மார்க்கெட்டில் கத்திரிக்காய் விலை கடுமையாக அதிகரித்து கிலோ ஒன்று 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஓட்டல் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கத்திரிக்காய் மட்டுமல்லாது முட்டை கோஸ் மற்றும் குடை மிளகாய் போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

Also read:  தக்காளி முதல் பெட்ரோல் வரை.. 2021ல் விலையேற்றம் அடைந்தவை..

விண்ணை முட்டும் வகையில் கத்திரிக்காய் விலை உயர்ந்துள்ளதை அடுத்து இல்லத்தரசிகளின் காய்கறி பட்ஜெட்டில் பெரிய அடி விழுந்துள்ளது. மேலும் விலை உயர்வால் கத்திரிக்காய் வாங்க வருவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக மொத்த விலை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, ஹூப்பள்ளியில் உள்ள பல உணவகங்கள் தங்கள் மதிய உணவு மெனுவில் இருந்து பிரபலமான கத்தரி கறியை நீக்கி உள்ளன.

உணவகங்களுக்கு காய்களிகளை சப்ளை செய்யும் மொத்த விலை வியாபாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், மழைக்காலம் முடிந்தும் மழை தொடர்ந்து வருவதால் கத்திரிக்காய் சாகுபடி பாதித்துள்ளது. இதன் காரணமாக கத்திரிக்காய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனை அறிந்து ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Also read:  திருடன் என நினைத்து மகளின் ஆண் நண்பரை கத்தியால் குத்திய தந்தை - நள்ளிரவில் சம்பவம்

டிசம்பர் 24 முதல் 27 வரை கத்திரிக்காய் விலை கிலோவுக்கு 200 முதல் 220 ரூபாய் வரை எகிறியது. இருப்பினும் தற்போது 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இந்த மாதம் நிறைய திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போதிலும் கத்திரிக்காயை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயங்குகின்றனர். ஒரு சில பெரிய ஓட்டல்கள் தவிர்த்து பல ஓட்டல்களிலும் கத்தரி டிஷ்கள் பறிமாறப்படுவதில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Brinjal, Vegetable