• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் கன மழையால் உடைந்த பாலம் - போக்குவரத்து துண்டிப்பு!

பீகாரில் கன மழையால் உடைந்த பாலம் - போக்குவரத்து துண்டிப்பு!

உடைந்த பாலம்

உடைந்த பாலம்

பாட்னா நகருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தனப்பூர் பாலத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

  • Share this:
பீகாரில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பைபா பாலம் இரண்டாக உடைந்து கிழக்கு உத்தரப் பிரதேசத்துடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பாட்னா, தனபூர் மற்றும் டியாரா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விடியவிடிய பெய்தது. ஒரு சில இடங்களில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. வேகமாக வீசிய காற்றில் வீடுகளின் மேற்கூரைகளும் பறந்து சென்றன. குறிப்பாக, பாட்னா நகருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தனப்பூர் பாலத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டியரா (Diara) நகரத்துக்கும் பாட்னாவுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

அதேபோல், பீகாரைச் சேர்ந்த 6 கிராம மக்களும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து பேசிய பீகார் மாநிலத்தின் ராஜ்ய புல் நிர்மான் நிகாம், நிர்வாக அதிகாரி முகமது குர்ஷித் பேசும்போது, பாலத்தின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், பாலம் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜூன் 7 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்ததாகவும், இதற்கான அறிவிப்பு மே 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அதற்கு முன்பே, கனமழையால் பாலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த முகமது குர்ஷித், போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்கு ஏற்ப பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல், கடந்தவாரம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை யாஷ் புயல் கடுமையாக தாக்கியது. இதனால், அந்த மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுக்காப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து பிரதமர் மோடி ஹெலிக்காப்படரில் பறந்தவாறு இருமாநிலங்களையும் ஆய்வு செய்து, அம்மாநில முதலமைச்சர்களான நவீன் பட்நாயக் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனார்.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து உடனடியாக தலா 500 கோடி ரூபாயை ஒதுக்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்தார். இந்த புயல் தாக்கத்தின்போதும் பாட்னாவில் கனமழை பெய்தது. தன்பூர் பாலமும் சேதமடைந்து போக்குவரத்து தடை பட்டிருந்தது. அந்த சேதங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியிருந்த நிலையில், தற்போது கனமழையால் பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Also read... காய்ச்சலில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - சென்னையில் சோகம்

சாலைகள் குளங்கள்போல் காட்சியளிக்கின்றன. கத்திகார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மழை நீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு இருக்கும் நீரால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை அறைகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை உடனடியாக அகற்றுவதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்த நிலையில், துப்புரவு ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: