Home /News /national /

திருமண நிகழ்வில் பாலின சமத்துவம் - கணவர் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டாட்டம்!

திருமண நிகழ்வில் பாலின சமத்துவம் - கணவர் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டாட்டம்!

திருமணத்தில் தாலி கட்டிக் கொள்வதை மணப்பெண் விரும்பவில்லை. அதே சமயம், தன்னுடைய நெற்றியில் மணமகன் குங்குமம் வைப்பதை ஏற்றுக் கொண்டார். இருப்பினும், அதேபோல மணமகன் நெற்றியில் பதிலுக்கு அவர் குங்குமம் வைத்தார்.

    இந்தியாவில் திருமணங்கள் என்பது பல சடங்கு, சம்பிரதாயங்கள் நிரம்பியது. ஒவ்வொரு இனத்திலும் திருமண சடங்குகள் வெவ்வேறாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைய நவீன காலத்தில் மணப்பெண்கள் பலர், பழைய சடங்கு, சம்பிரதாயங்களை உடைத்து வருகின்றனர். தன்னுடைய திருமணம், தான் விரும்பியபடி நடக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

    சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பலாஷா என்ற பெண், திருமணத்தில் பல்வேறு சடங்குகளை மாற்றி அமைத்துள்ளார். இந்திய திருமணங்களில் பொதுவாக ‘கன்னியாதானம்’ செய்வது வழக்கம். அதாவது, மணப்பெண்ணின் கையை, அவரது தந்தை கைப்பற்றி மணமகனின் கைகளில் ஒப்படைப்பார். இனி, தன் மகளை உங்கள் மனைவியாக காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பது இதற்கு அர்த்தமாம். அதேசமயம், கன்னியாதானத்திற்கு வேறுசில அர்த்தங்களும் கூறப்படுகின்றன.

    கணவருக்கு குங்குமம் வைத்த மணப்பெண்

    திருமணத்தில் தாலி கட்டிக் கொள்வதை மணப்பெண் விரும்பவில்லை. அதே சமயம், தன்னுடைய நெற்றியில் மணமகன் குங்குமம் வைப்பதை ஏற்றுக் கொண்டார். இருப்பினும், அதேபோல மணமகன் நெற்றியில் பதிலுக்கு அவர் குங்குமம் வைத்தார்.

    பெண்ணின் தந்தை கன்னியாதானம் செய்து கொடுப்பதைப் போல, மணமகனின் பெற்றோர் அவரை தனக்கு ‘குன்வர்தன்’ செய்து கொடுக்க வேண்டும் என்று மணப்பெண் கட்டளையிட, அதன்படியே நடந்தது. தொழில் அடிப்படையில், பாலினம் மற்றும் சுகாதார அமைப்புகள் குறித்த ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில், தனது திருமணத்தில் பாலின சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறி, அதன்படி செய்து முடித்துள்ளார் அந்தப் பெண்.

    https://twitter.com/BrahmaandKiMaa/status/1513786384699383812?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1513786384699383812%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fbride-puts-sindoor-on-grooms-head-chooses-kunwardaan-for-gender-equality-4974925.html

    பாராட்டும், எதிர்ப்பும்

    புதுமையான சடங்குகளுடன் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் வீடியோ டிவிட்டரில் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை அந்த வீடியோ பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலர், இதை பாலின சமத்துவத்தை நிலைநிறுத்திய நடவடிக்கை என பாராட்டி வருகின்றனர்.

    அதே சமயம், திருமணம் என்பது பழமையான சடங்குகளைக் கொண்டது என்றும், இதில் புதுமையை புகுத்திய அந்தப் மணப்பெண் ஏன் கையில் மருதாணி அணிந்து கொண்டார், ஏன் பட்டாடை உடுத்தினார் என்றும் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல, மேலும் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    விவாதத்திற்கு உள்ளாகும் சம்பிரதாயங்கள்

    இந்தியாவில் சமீப காலமாக சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை கடைபிடிப்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது என்றாலும் கூட, அவற்றை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் போது விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக, மரபு மற்றும் சடங்குகளை பின்பற்ற விருப்பம் இல்லையெனில், சட்டத்திற்கு உட்பட்டு பதிவுத் திருமணமாக செய்து கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.
    Published by:Elakiya J
    First published:

    Tags: Trending, Trending Videos

    அடுத்த செய்தி