மாப்பிள்ளை கருப்பா இருக்காரு... கல்யாணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கோடரியால் வெட்டி கொன்ற அண்ணன்

மணப்பெண் - கோப்பு படம் (Yasin Hasan / Shutterstock.com)

நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் சண்டைப் போட்டுள்ளார். இப்போது சண்டைபோட்டால் எப்படி என பெற்றோர்கள் எடுத்துக்கூறியும் அந்தப்பெண் விடாப்பிடியாக இருந்துள்ளார்.

 • Share this:
  மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை அவரது அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கப்பூரை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவரது தங்கை சந்திரகலாவுக்கு  அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளார். மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி சந்திரகலா முதலில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் அந்தப்பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்து சம்மதம் பெற்றுள்ளனர்.

  Also Read:  தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

  இதனையடுத்து இருவீட்டாரும் திருமணத்துக்கு நாள் குறித்தனர். ஜூலை 13-ம் தேதி திருமணம் வைத்துக்கொள்ள இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.திருமணத்துக்கான பட்டு எடுப்பது, பத்திரிகை அடிப்பது என கல்யாண வேலை பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்தது. ஜூலை 13-ம் தேதி ( இன்று) திருமணம் நடக்கவிருந்த நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி நேற்று வீட்டில் தகராறு செய்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாப்பிள்ளை கருப்பாக இருப்பதால் எனக்கு பிடிக்கவில்லை கல்யாணத்தை நிறுத்துங்கள் நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் சண்டைப் போட்டுள்ளார். இப்போது சண்டைபோட்டால் எப்படி என பெற்றோர்கள் எடுத்துக்கூறியும் அந்தப்பெண் விடாப்பிடியாக இருந்துள்ளார்.
  இதன்காரணமாக அண்ணன் - தங்கை இருவருக்கும் தகராறு வந்துள்ளது. எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம். இதற்கு முன்னால் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்கிறேன் என சண்டைபோட்டுள்ளார்.

  Also Read:  இப்படியும் ஒரு பெண்ணா? கணவரை அம்மா உடன் பகிர்ந்த மகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

  ஆத்திரத்தில் இருந்த ஷ்யாம் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சந்திரகலாவை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கல்யாண வீடு சோகத்தில் மூழ்கியது.

  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சந்திரகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷ்யாம் சுந்தரை  போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: