முகப்பு /செய்தி /இந்தியா / மணமகன் மடியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த மணப்பெண்.. திருமண மேடையில் அதிர்ச்சி சம்பவம்..

மணமகன் மடியில் மயங்கிவிழுந்து உயிரிழந்த மணப்பெண்.. திருமண மேடையில் அதிர்ச்சி சம்பவம்..

திருமண நாளில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருமண நாளில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Marriage Bride: திருமண மூகூர்த்தத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மணமகன் சில நிமிடங்களில்  கழுத்தில் தாலி கட்ட இருந்த நிலையில், மணமகள் திடீரென மணமகன் மீது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா நகர தெலுங்கு தேச கட்சியின் இளைஞரணி தலைவர் சிவாஜி - சுஜனா திருமணம் கடந்த புதன்கிழமை(மே) இரவு 11 மணிக்கு நடைபெற்றது. முதல், நாள் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருமண சடங்குகளும் நடைபெற்றன.

அப்போது தெலுங்கு சம்பிரதாய முறைப்படி மணமகள் தலையில் சீரகம், வெல்லம் ஆகியவற்றை வைத்து நூறு ஆண்டுகள் மணமக்கள் சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும் என புரோகிதர் வேத மந்திரங்கள் முழுங்க சடங்குகள் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மணமகள் சுஜனா சுயநினைவை இழந்து மணமகன் மடியில் விழுந்தார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து சென்ற நிலையில் மணமகள் சுஜனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்தார்.

இந்த சம்பவம் இரு குடும்பங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாரடைப்பில் மணமகள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் விஷத் தன்மை கொண்ட பொருளை அருந்தியதால் இறந்தது தெரியவந்தது. எதற்காக அவர் விஷம் குடித்தார்?, காதல் தோல்வியா அல்லது விருப்பம் இல்லாத திருமணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தொடர் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு வருடத்தில் பேரக்குழந்தை பெற்று கொடுங்க.. இல்லன்னா 5 கோடி கொடுங்க... மகன், மருமகள் மீது வழக்கு போட்ட பெற்றோர்

திருமண  மூகூர்த்தத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Andhra Pradesh, Marriage Problems