Home /News /national /

மணமேடையில் நடனமாடி திருமணம் முடிந்த கையுடன் மணப்பெண் தற்கொலை

மணமேடையில் நடனமாடி திருமணம் முடிந்த கையுடன் மணப்பெண் தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கட்டாயத் திருமணம் காரணமாக மணப்பெண் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

    தெலங்கானா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் மணமகனுடன் நடனமாடிய மணப்பெண் திருமணம் முடிந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகர் பாத்ததோட்டா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா.
    இவர்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம் காலை திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக திருமனத்திற்கு முதல் நாள் அன்று இரவு திருமண ஏற்பாடுகள்,பாட்டு கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன .திருமண நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா, மணப்பெண் லட்சுமி ஆகியோர் நடனம் ஆடினார்.

    நேற்று முன் தினம் காலை திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் அன்று மாலை மணப்பெண் லட்சுமி வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். கழிவறைக்கு சென்ற லட்சுமி நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. எனவே கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி சுயநினைவின்றி அங்கு கீழே விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாத்தபேட்டா காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறிய லட்சுமிக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததும், அதனால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையும் படிங்க: திருமணம் செய்வதாக 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சம் சுருட்டிய நபர் கைது

    திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணம் முடிந்த நிலையில், பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Kannan V
    First published:

    Tags: Suicide

    அடுத்த செய்தி