• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நியூஸ்பேப்பர் படிக்க சொல்லி மணமகனுக்கு டெஸ்ட்! கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி மணப்பெண் ட்விஸ்ட்....

நியூஸ்பேப்பர் படிக்க சொல்லி மணமகனுக்கு டெஸ்ட்! கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி மணப்பெண் ட்விஸ்ட்....

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகன் தான் அணிந்திருந்த கண்ணாடிகளை ஒரு முறை கழட்டாமல் இருந்ததை பெண் வீட்டார் பார்த்துள்ளனர்.

  • Share this:
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல காரணங்களுக்காக கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் சுவாரஸ்யத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளன. சமீப நாட்களுக்கு முன்னர் கூட மணமகன்கள் இரண்டாம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, குடித்துவிட்டு திருமணத்திற்கு வந்தது என பல்வேறு காரணத்திற்காக மணப்பெண்கள் கடைசி நேரத்தில் தங்களின் திருமணத்தை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இந்த வரிசையில் மணமகனுக்கு, கண்ணாடி அணியாமல் கண் பார்வை தெரியாது என்ற உண்மை தெரியவந்ததையடுத்து கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி அதிர்ச்சி தந்துள்ளார் மணப்பெண் ஒருவர். மேலும் மணமகன் வீட்டார் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகேயுள்ள ஜமாலிபுர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் சிங். இவர் தனது மகளான அர்ச்சனாவுக்கு, அச்சால்டா பகுதியைச் சேர்ந்த சிவம் என்ற இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தார்.

Read More:   கேரள இளம்பெண் மரணம்.. கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர்..வாட்ஸ் அப் சாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ஜூன்- 20ம் தேதி அர்ச்சனாவுக்கும், சிவத்திற்கும் திருமணம் நடைபெற இருந்தது. அன்றைய தினம் மோட்டார்சைக்கிள் மற்றும் பணம் ஆகியவற்றை மணமகனுக்கு தருவதற்காக மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

திருமணத்திற்கு வருகை தந்த சொந்தபந்தங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர், மணமகன் சிம்மாசனம் போன்ற சோஃபாவில் அமரவைக்கப்பட்டிருந்தார். இந்த நேரத்தில் மணமகன் தான் அணிந்திருந்த கண்ணாடிகளை ஒரு முறை கழட்டாமல் இருந்ததை பெண் வீட்டார் பார்த்துள்ளனர்.

Also Read:  ஜியோமீட்டில் வருடாந்திர பங்குதாரர் சந்திப்பை எவ்வாறு பார்ப்பது? என்ன அறிவிப்பு வெளியாகும்?

இதனால் சந்தேகம் அடைந்த அவர்களுக்கு, மணமகனுக்கு கண்ணாடி அணியாவிட்டால் பார்வை தெரியாது என கூறப்பட அதிர்ந்து போனார்கள். மணப்பெண்ணோ தனது சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்காக இந்தி செய்தித்தாள் ஒன்றை கொண்டு வந்து கொடுத்து இதனை படித்துக் காட்டுமாறு மணமகனிடம் கோரியுள்ளார். ஆனால் அவரால் படிக்க முடியாமல் போகவே அந்த திருமணத்தையே மணப்பெண் நிறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் பெண் பார்க்க வந்த போது மணமகன் அழகுக்காக கண்ணாடி அணிந்திருப்பதாகவே பெண் வீட்டார் கருதினர். ஆனால் அவருக்கு பார்வை குறை இருப்பது தெரியவந்த நிலையில் கடைசி நேரத்தில் திருமணத்தையே நிறுத்தினர். இதன் பின்னர் படித்தவர் என பொய் கூறி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாக கூறி மணமகன் வீட்டார் மீது பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: