ஹோம் /நியூஸ் /இந்தியா /

Gun-ம் என்னதுதான் பொண்ணு என்னதுதான் – மணமேடையில் மாஸ் காட்டிய மாப்பிள்ளை

Gun-ம் என்னதுதான் பொண்ணு என்னதுதான் – மணமேடையில் மாஸ் காட்டிய மாப்பிள்ளை

மணமக்கள்

மணமக்கள்

காசியாபாத்தில் மணமேடையில் மணமக்கள் செய்த காரியத்தை பார்த்து உறவினர்களே கொஞ்சம் பயந்துதான் போனார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வடஇந்தியாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் துப்பாக்கியால் சுட்டு கெத்து காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அந்த நாளை சிறப்பாகவும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒருநாளாகவும் மாற்ற மணமக்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை செய்ய முனைவார்கள். டெல்லிக்கு அருகில் உள்ள காசியாபாத்தில் மணமேடையில் மணமக்கள் செய்த காரியத்தை பார்த்து உறவினர்களே கொஞ்சம் பயந்துதான் போனார்கள்.

இந்தியாவில் திருமண சடங்குகள் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் கலாச்சார முறைப்படி திருமண கொண்டாட்டங்கள் இருக்கும். வட இந்தியாவில் நடக்கும் திருமணத்துக்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் நிறைய கொண்டாட்டங்கள் இருக்கும். சமூகவலைத்தளம் வந்தபின்னர் அதுப்போன்ற கொண்டாட்டங்களின் போது எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகின்றன.

Also Read: கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி - செக்ஸ் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவருக்கு நேர்ந்த சோகம்..

டெல்லி காசியாபாத்தில் நடந்த திருமண வரவேற்பில் மணமக்கள் இருவரும் உறவினர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். மேடையில் இருந்த மணமகன் தனது நண்பரை அழைத்து கைத்துப்பாக்கியை வாங்கினார். போக்கிரி படத்துல நடிகர் விஜய் ஒரு வசனம் சொல்வாரு.. Gun-னு என்னதுதான் பொண்ணு என்னதுதான் என்று. அதுபோல் மேடையில் இருந்த மாப்பிள்ளை துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

மாப்பிள்ளை துப்பாக்கியால் சுட மணப்பெண் மாப்பிள்ளை கையை பற்றிக்கொண்டார். வரவேற்புக்கு வந்திருந்த உறவினர்கள், விருந்தினர்கள் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருமணத்துக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி போலீஸ் கண்ணில் பட இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருமண விழாவில் எப்படி துப்பாக்கியால் சுடலாம் என மணமக்களிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Marriage