ஹோம் /நியூஸ் /இந்தியா /

மணமகன் பாரம்பரிய உடை அணிய மறுத்ததால் களேபரமான திருமணம்.. வடிவேல் பட பாணியில் சம்பவம்..

மணமகன் பாரம்பரிய உடை அணிய மறுத்ததால் களேபரமான திருமணம்.. வடிவேல் பட பாணியில் சம்பவம்..

திருமணத்தின் போது மணமகன் பாரம்பரிய வேஷ்டி - குர்தா அணிய மறுத்ததால் மணமக்கள் வீட்டார் மோதிக் கொண்ட விநோத சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வடிவேலு படத்தில் வரும் காமெடி பாணியில், மத்திய பிரதேசத்தில் மணமகன் பாரம்பரிய உடை அணிய மறுத்ததற்காக உறவினர்கள் திருமணத்தையே நிறுத்தியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்லாலுக்கும், மாங்பயேடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மணமகளின் கிராமத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மணமக்களின் உற்றார் உறவினர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

  திருமண சடங்கின் போது மணமகன் சுந்தர்லால் ஷெர்வானி உடை அணிந்து வந்திருந்தார். பழங்குடியினர் திருமணத்தின்போது வழக்கமாக அணியும் வேட்டி- குர்தாவிற்கு பதிலாக மாப்பிள்ளை ஷெர்வானி உடை அணிந்திருந்தது மணமகளின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் வேட்டி அணிய சொல்லி வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் ஷெர்வானி உடையை கழற்ற மாப்பிள்ளை மறுத்துவிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

  ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த லாரி மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதால் திருமண மண்டபமே களேபரமாக மாறியது.

  இதனால், மனமுடைந்த மணமகன் சுந்தர்லால் மணமகளை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாம்னோத் காவல்நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: மேடையில் நிர்மலா சீதாராமன் எதிர்பாராத விதமாக செய்த செயலை பாராட்டும் நெட்டிசன்கள்

  இது தொடர்பாக மாப்பிள்ளை சுந்தர்லால் கூறுகையில், "உடை தொடர்பாக தான் பிரச்னை எழுந்தது. இதில் குடும்ப உறுப்பினர்கள் ஏதும் மோதலில் ஈடுபடவில்லை. சில உறவினர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டனர். எனவே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Family fight, Marriage Problems