• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இதுவும் “Couple Goals”... மணக்கோலத்தில் மேடையிலேயே புஷ்-அப்ஸ் செய்து அசத்திய ஜோடி! வைரல் வீடியோ

இதுவும் “Couple Goals”... மணக்கோலத்தில் மேடையிலேயே புஷ்-அப்ஸ் செய்து அசத்திய ஜோடி! வைரல் வீடியோ

புதுமண தம்பதியின் couple goals மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் இலக்குகளையும் அறிவுறுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

  • Share this:
திருமண ஜோடியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏன் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன், ஒரு திருமண வீடியோவிலிருந்து நீங்கள் பொதுவாக என்ன எதிர்பார்ப்பீர்கள்? சடங்குகள்? நடனம்? நண்பர்கள் மற்றும் குடும்பம்? அல்லது மணமகனும், மணமகளும் திருமண மேடையில் ஒன்றாக புஷ்-அப் செய்வதா? ஆம், நீங்கள் வாசித்தது சரிதான்.

வடமாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் ஒன்றாக இணைந்து மேடையில் புஷ்-அப்ஸ் செய்வது பார்ப்போரை “ஓ இதுவும் couple goalsதான் பா“ என்று சொல்ல வைக்கிறது. இருவரும் ஜிம் பயிற்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை மணமகள் அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வைரலான “பச்பன் கா பியார்” என்ற ஹிந்தி பாடல் பின்னணியில் ஒலிக்க, மண ஜோடிகள் புஷ்-அப்ஸ் செய்வது நெட்டிசன்களை குஷிப்படுத்தியுள்ளது. நேற்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து, 2,700க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.




Must Read | உடம்ப குறைக்கபோறீங்களா? முதலில் இதை கொஞ்சம் கவனிங்க!

இந்த புதுமண தம்பதியின் couple goals மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் இலக்குகளையும் அறிவுறுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். நெட்டிசன்களுள் சிலர், நகைச்சுவையாக, “உங்கள் லெஹங்காவின் எடை உங்கள் உடல் எடைக்கே சமமானது. எனவே, நீங்கள்தான் நிச்சயமாக வென்றிருக்க வேண்டும்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற வீடியோக்கள் வைரலாவது மட்டுமின்றி, உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: