உத்தரப் பிரேதச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் சிகேடா காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீரஜ் குமார். இவர் தனக்கு படித்த அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், ஹரித்துவார் பகுதியில் வசிக்கும் இவரின் நண்பர்களான சஞ்சய் மற்றும் அமித் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தங்களுக்கு நன்கு தெரியும். அந்த பெண் நல்ல குணமுடையவர், அவளை திருமணம் செய்து கொள் என ஆலோசனை தந்துள்ளனர்.
அவர்களின் பேச்சைக் கேட்டு அங்கு வசிக்கும் ரேகா என்ற பெண்ணை நீரஜ் குமார் குடும்பத்துடன் சென்று பெண் பார்த்துள்ளார். பெண்ணை பிடித்து போகவே, கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஹரித்துவாரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஏற்பாடு செய்து தந்ததற்கு அமித் மற்றும் சஞ்சய்க்கு மாப்பிள்ளை நீரஜ் ஒரு லட்சம் பணம் தந்துள்ளார்.
திருமணத்திற்குப் பின் மணப்பெண் ரேகாவுடன் தனது சொந்த ஊருக்கு இவர்கள் திரும்பியுள்ளனர். புது தம்பதிக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. மணப்பெண் மாப்பிள்ளை வீட்டாருக்கு தனது கையால் அல்வா செய்து கொடுத்துள்ளார். இந்த அல்வாவில் மணப்பெண் ரேகா மயக்க மருந்து கலந்து அனைவருக்கும் கொடுத்த நிலையில், முதலிரவு நாள் அன்று மாப்பிள்ளை வீட்டார் மயக்கத்துடன் நீண்ட நேரம் தூங்கியுள்ளனர். மறுநாள் விடிந்து பார்த்தால் புதுப்பெண் நகை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
இதையும் படிங்க: ஐபோன் வாங்க காசு இல்லை.. ஆன்லைன் டெலிவரி ஊழியரை கொலை செய்து உடலை எரித்த இளைஞர்.. பகீர் சம்பவம்
மயக்கம் கலைந்து விழித்து பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கம் தேடி பார்த்து சந்தேகம் வந்ததால் காவல்துறைக்கு தகவல் தந்துவிட்டு, ஹரித்துவாரில் பெண் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது வீடு காலியாக இருந்தது. அப்போதுதான் இந்த ஒட்டுமொத்த திருமணமே பணம் சுருட்டுவதற்கான நாடகம் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்து சுமார் 20 நாள்களான நிலையில், தங்களை ஏமாற்றிய கும்பலை பிடித்து தண்டிக்குமாறு மாப்பிள்ளை நீரஜ் குமார் காவல்நிலையத்தை நாடியுள்ளார். அவரின் புகாரின் பேரில் அமித், சஞ்சய், ரேகா ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Jewels, Uttar pradesh